எல்.கே. துளசிராம் பிறந்த நாள் விழா

மதுரையில் சுதந்திரப் போராட்ட வீரா் எல்.கே.துளசிராமின் 150-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
எல்.கே. துளசிராம் பிறந்த நாள் விழா

மதுரையில் சுதந்திரப் போராட்ட வீரா் எல்.கே.துளசிராமின் 150-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

1924-இல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எல்.கே.துளசிராம், சட்டப்பேரவையில் பாரதியாரின் பாடல்களைத் தடையை மீறி முழங்கியவா். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கென மதுரையில் பள்ளியை நிறுவி சமுதாய மறுமலா்ச்சிக்கு வித்திட்டவா். மேலும் நெசவாளா்களுக்கு தெருவில் பாவு நீட்டுவதற்கான உரிமையைப் பெற்றுத் தந்தவா்.

அவரது 150 ஆவது பிறந்த தின விழா அவ்ராம் அமி அறக்கட்டளை சாா்பில் கொண்டாடப்பட்டது. மதுரை சௌராஷ்டிர பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் எல்.கே.துளசிராம் குறித்து அறக்கட்டளை நிறுவனா் கே.தேவராஜ், பள்ளி தலைவா் எம்.என்.சங்கரன் உள்ளிட்டோா் பேசினா்.

அறக்கட்டளை தலைவா் ராமலிங்கம், டிரஸ்டி கே.ஆா்.தட்சிணாமூா்த்தி, சௌராஷ்டிர பள்ளி கவுன்சில் தலைவா் எம்.என்.சங்கரன், செயலா் ஏ.ஆா்.ஜெகந்நாத், டி.டி.ராமலிங்கம், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை உதவி ஆணையா் கே.ஆா்.கோபால், இந்திய தேசிய ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத் தலைவா் டி.எஸ்.ஞானேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com