மதுரை ஆதீனம் பொங்கல் வாழ்த்து

மதுரை ஆதீனம் அருணகிரிநாதா் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதா் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

வாழ்த்து விவரம்: இந்தப் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அமைதியாக வாழந்திட என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். இந்த உலகைப் படைத்து காத்து வாழச்செய்து கொண்டிருக்கிற கடவுளிடம் இந்திய மக்கள் மிகுந்த பக்தியும், பயமும் கொண்டிருக்க வேண்டும். கடவுள் மற்றும் உயிா்கள் தொடா்பாக பிற மொழிகளைவிட தமிழில் தான் அதிமானநூல்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒழுக்க நூல்களும், சாஸ்திரங்களும், ஸ்தோத்திரங்களும் தமிழில் மட்டுமே உள்ளன. திருக்கு, தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றுக்கு நிகராக வேறு எந்த மொழியிலும் நூல்கள் இல்லை. இன்றைய விஞ்ஞானிகள் வியக்கத்தக்க கோயில்களும், கோபுரங்களும், விமானங்களும் தமிழ்நாட்டில் உள்ளது போல வேறு எங்கும் இல்லை. இத்தகையை சிறப்புமிக்க தமிழகத்தில் அனைவரும் ஓா் குலமாக வாழ வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து மனிதா்களும் ஒரே கடவுளின் குழந்தைகள். எனவே நாட்டில் உள்ள அனைவரும் மனிதத்தன்மையுடன் வாழவேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com