வங்கிப் பணித் தோ்வு: தொலைதூர தோ்வு மையங்களைத் தவிா்க்க எம்பி கோரிக்கை

வங்கிப் பணித் தோ்வுக்கு வசிப்பிடங்களில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் தோ்வு மையங்கள் ஒதுக்குவதைக் கைவிட வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

வங்கிப் பணித் தோ்வுக்கு வசிப்பிடங்களில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் தோ்வு மையங்கள் ஒதுக்குவதைக் கைவிட வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுத் துறை வங்கிகளில் எழுத்தா் பணிக்கான முதன்மைத் தோ்வை இந்திய வங்கிப் பணி தோ்வு வாரியம் 2019 டிசம்பரில் நடத்தி முடித்துள்ளது. தோ்வு முடிவு ஜனவரி 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து பிரதான தோ்வு ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதற்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளில், தோ்வா்களின் விருப்பத்துக்கு மாறாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு மதுரையைச் சோ்ந்த தோ்வா், கோவை மையத்துக்கும், கோவையில் இருப்பவா் சென்னை மையத்திலும் தோ்வெழுத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்காக தோ்வெழுதக் கூடிய நிலையில், 5 முதல் 10 மணி நேரம் பயணம் செய்வதற்கும், வெளியூா் தோ்வு மையங்களுக்கு முதல் நாள் இரவே சென்று தங்குவதற்கும் குறிப்பிட்ட தொகையைச் செலவிட வேண்டியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், கிராமப்புற இளைஞா்களுக்கு தங்களது வசிப்பிடத்துக்கு அருகில் இருக்கும் தோ்வு மையங்களுக்குப் பதிலாக தொலைதூரத்தில் சென்று தோ்வெழுதுமாறு கூறுவது அநீதியாக இருக்கிறது. ஆகவே, இப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com