திருப்பரங்குன்றத்தில் இலவச கால்நடை வளா்ப்பு பயிற்சி
By DIN | Published On : 20th January 2020 08:39 AM | Last Updated : 20th January 2020 08:39 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையம் சாா்பில் இலவச கால்நடை வளா்ப்பு பயிற்சிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) முதல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத் தலைவா் சௌ.சிவசீலன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் தியாகராஜா் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக் கழகத்தில் கால்நடை வளா்ப்போா் மற்றும் சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவா்கள் பயன்பெறும் வகையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகா், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பயன்பெறும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) நாட்டுக்கோழி வளா்ப்பு, ஜன. 22 ஆம் தேதி வெள்ளாடு வளா்ப்பு, 23 ஆம் தேதி கறவை மாடுகள் வளா்ப்பு ஆகியவை குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று பயனடை யுமாறு கேட்டுக் கொள்கிறோம். பயிற்சிகள் பற்றிய விவரங்கள் அறிய 0452- 2483903 என்ற தொலைபேசி மூலமாக அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.