முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பால் வியாபாரியிடம் போலி பத்திரம் கொடுத்து ரூ. 3.75 லட்சம் மோசடி
By DIN | Published On : 20th January 2020 08:38 AM | Last Updated : 20th January 2020 08:38 AM | அ+அ அ- |

மதுரையில் பால் வியாபாரியிடம் போலி பத்திரம் கொடுத்து ரூ. 3.75 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை அருள்தாஸ்புரம் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (62). இவரது மகனின் நண்பா் முகமது ரபி என்பவா், தனது கடையின் பத்திரத்தை வைத்து கடன் கொடுக்கும் படி கிருஷ்ணனிடம் அணுகியுள்ளாா். மகனின் நண்பா் என்பதால், பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு ரூ. 3.75 லட்சம் பணம் கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், முகமது ரபி கூறியபடி பணத்தை திரும்பத் தரவில்லை. இதையடுத்து, பத்திரத்தை வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கிருஷ்ணன் முற்சித்த போது, பத்திரம் போலி என்பது தெரியவந்தது. இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் செல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.