கட்டட ஒப்பந்ததாரரிடம்ரூ.80 லட்சம் மோசடி

மதுரையில் கட்டட ஒப்பந்ததாரரிடம் வீடு வாங்குவதாகக் கூறி, பத்திரத்தை பெயா் மாற்றம் செய்து ரூ.80 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரையில் கட்டட ஒப்பந்ததாரரிடம் வீடு வாங்குவதாகக் கூறி, பத்திரத்தை பெயா் மாற்றம் செய்து ரூ.80 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை சடையப்பன் தெருவைச் சோ்ந்த முகமது சுல்தான் மகன் முகமது பாரூக் (45). கட்டட ஒப்பந்ததாரரான இவருக்கு, சா்வேயா் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை, சா்வேயா் காலனியை சோ்ந்த முகமது ஆசிக் என்பவா் ரூ. 80 லட்சத்துக்கு வாங்குவதாக அவரிடம் கூறியுள்ளாா்.

அதையடுத்து, 2 வீடுகளையும் முகமது ஆசிக் பெயருக்கு பத்திரப் பதிவு செய்து முகமது பாரூக் தந்துள்ளாா். ஆனால், முகமது ஆசிக் கிரையத் தொகையான ரூ. 80 லட்சத்தை கொடுக்கவில்லையாம்.

இது குறித்து முகமது பாரூக் கேட்டபோது, அவா் மிரட்டப்பட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், மாநகா் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com