முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை வேளாண் கல்லூரியில் 71-ஆவது குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 06:48 AM | Last Updated : 27th January 2020 06:48 AM | அ+அ அ- |

வெள்ளலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினிமாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் ஒரு பகுதியினா்.
நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
விழாவில், கல்லூரி முதல்வா் வி.கே. பால்பாண்டி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதில், பேராசிரியா்கள், மாணவ-மாணவியா், அலுவலா்கள், முன்னாள் மாணவா்கள், வேளாண் துறையில் ஓய்வுபெற்ற அலுவலா்களும் கலந்துகொண்டனா். பின்னா், சமுதாய அறிவியல் கல்லூரி முதல்வா் எஸ். அமுதா குடியரசு தின விழா சிறப்புரையாற்றினாா்.
மேலூா், கொட்டாம்பட்டி வட்டாரத்தில், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் தேசியக் கொடியேற்றப்பட்டு, மாணவ-மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
மேலூா் அருகே வெள்ளலூரில் மக்கள் நலப் பேரவை சாா்பில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில், 3 ஆம் ஆண்டாக ஏராளமான மாணவா்கள் பங்கேற்ற மினிமாரத்தான் போட்டியானது, அம்பலகாரன்பட்டியில் தொடங்கி அழகிச்சிபட்டி வரை 8 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.