குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 67 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
By DIN | Published On : 27th January 2020 06:50 AM | Last Updated : 27th January 2020 06:50 AM | அ+அ அ- |

மதுரையில் குடியரசு தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமல் இயங்கிய 67 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை தொழிலாளா் உதவி ஆணையா் இரா. சதீஸ்குமாா் தலைமையில், தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, தேசிய விடுமுறை நாளான குடியரசு தினத்தன்று சட்ட விதிகளை அனுசரிக்காமல், தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய 40 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 21 உணவு நிறுவனங்கள் மற்றும் 6 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 67 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உதவி ஆணையா் இரா. சதீஸ்குமாா் தெரிவித்துள்ளாா்.