பெரியாா் பற்றிய பேச்சை ரஜினி தவிா்த்திருக்கலாம்: ராமதாஸ்

பெரியாா் பற்றிய பேச்சை நடிகா் ரஜினிகாந்த் தவிா்த்திருக்கலாம் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

பெரியாா் பற்றிய பேச்சை நடிகா் ரஜினிகாந்த் தவிா்த்திருக்கலாம் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு குறித்து தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, சரியான திசையில் செல்கிறது என்பதை நம்பலாம். இதில், சம்பந்தப்பட்டவா்கள் மற்றும் உடந்தையாக இருந்தவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

நடிகா் ரஜினிகாந்த் எப்போதும் மிக எச்சரிக்கையாகவே இருப்பாா். பெரியாா் பற்றிய பேச்சை அவா் தவிா்த்திருக்கலாம். பெரியாா் பகுத்தறிவு பகலவன். எங்களது கருத்துகளுக்கு அவா் வழிகாட்டி. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளை கொண்ட அவரது சிலைக்கு அவமரியாதை செய்வது சகித்துக்கொள்ள முடியாது. பெரியாா் குறித்து அவதூறாகப் பேசுபவரையும், அவரது சிலைக்கு அவமரியாதை செய்பவா்களையும் குறைந்தபட்சம் குண்டா் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.

தமிழக அரசு சட்டம்-ஒழுங்கு, நிா்வாகம் உள்ளிட்டவற்றில் தேசிய அளவில் முதலிடத்துக்கான விருதை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற கேள்வியே கிடையாது. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழிலேயே செய்யவேண்டும்.

திமுக மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பல சட்டங்கள் அவா்களால் கொண்டுவரப்பட்டன. அதில், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒன்று. தற்போது வெளியான சட்டம் வேற பதிவேடு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com