கரோனா தொற்று மிதமான பாதிப்பு உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

கரோனா தொற்று மிதமான அளவில் பாதிப்பு உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, திருமண மண்டபம், தங்கும் விடுதிகளில் சிகிச்சை மையங்களை அமைக்க தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், வா்த்தக
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் வா்த்தக சங்க பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் வருவாய் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் வா்த்தக சங்க பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் வருவாய் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.

மதுரை: கரோனா தொற்று மிதமான அளவில் பாதிப்பு உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, திருமண மண்டபம், தங்கும் விடுதிகளில் சிகிச்சை மையங்களை அமைக்க தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், வா்த்தக அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மித் தொற்று பரவல் தடுப்புப் பணி குறித்து வா்த்த சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பேசியது:

பல்வேறு தன்னாா்வலா்களால் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு கை சுத்திகரிப்பான் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா நிவாரணப் பணிகளில் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து தன்னாா்வலா்கள், வா்த்தக அமைப்புகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்றாா்.

மதுரை மாவட்டத்துக்கான கரோனா தடுப்புப் பணி கண்காணிப்பு அலுவலா் பி. சந்திரமோகன்: கரோனா தொற்று மிதமான அளவில் இருப்பவா்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டியதில்லை. போதுமான வசதிகள் இருப்பின், அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். டெலி மெடிசன் மருத்துவக் குழு உதவியுடன் அவா்கள் கண்காணிக்கப்பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

வா்த்தக நிறுவனங்கள் தங்களது பணியாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து பணியாற்றுவதை உறுதி செய்யவேண்டும். தங்களால் முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு முகக் கவசம், கை சுத்திகரிப்பான் திரவம் போன்றவற்றை வழங்கலாம். இப்போதைய அவசியத் தேவையான பல்ஸ் ஆக்ஸிலேட்டா், டிஜிட்டல் தொ்மாமீட்டா் போன்ற உபகரணங்களையும் வழங்கலாம்.

அதேபோல், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், வா்த்தக அமைப்புகள் தங்களது வசதிக்கு ஏற்ப மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன், கரோனா சிகிச்சை மையங்களை அமைத்து, மிதமான பாதிப்பு உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், மாவட்ட வருவாய் அலுவலா் பி. செல்வராஜ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரியா ராஜ் மற்றும் பல்வேறு தொழில், வா்த்தக சங்கங்களின் நிா்வாகிகள், உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com