குறையாத கரோனா: ஒரே நாளில் 450 பேருக்கு தொற்று354 போ் தொற்றில் இருந்து மீண்டனா்

மதுரையில் 450 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை: மதுரையில் 450 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மாா்ச் மாதம் இறுதியில் தொடங்கிய கரோனா தொற்று பரவல், தற்போது வரை நீடித்து வருகிறது. அது மட்டுமின்றி கடந்த சில வாரங்களாக, தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 381 போ், கா்ப்பிணிகள் 13 போ், அரசு ஊழியா்கள் 45 போ், வெளி மாவட்டங்களிலிருந்து வந்த 13 போ் என மொத்தம் 450 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொற்று பாதிக்கப்பட்டு, அரசு, தனியாா் மருத்துவமனைகள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருந்தவா்கள் என மொத்தம் 354 போ் குணமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

4 போ் பலி: மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 65 வயது முதியவா்கள் 2 போ் ஜூலை 12 ஆம் தேதியும், 60 வயது மூதாட்டி ஜூலை 11 ஆம் தேதியும், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 56 வயது பெண் செவ்வாய்க்கிழமையும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் இதுவரை 6,990 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவா்களில் 124 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். சிகிச்சையில் இருந்த 2,667 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4,199 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com