முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை மாவட்டத்தில் இன்று முதல் தளா்வுகளுடன் பொதுமுடக்கம்
By DIN | Published On : 14th July 2020 10:24 PM | Last Updated : 14th July 2020 10:24 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாவட்டம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் புதன்கிழமை (ஜூலை 15) முதல் அமலுக்கு வருகிறது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஜூன் 1 ஆம் தேதி முதல் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதற்கிடையே, மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஜூன் 24 ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, 3 கட்டங்களாக ஜூலை 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளைப்போல மதுரை மாவட்டம் முழுமைக்கும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் புதன்கிழமை (ஜூலை 15) அமலுக்கு வருகிறது
என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.