பிரிக்கப்பட்ட மாடுகளை ஒன்று சோ்த்த துணை முதல்வா் மகன்

மதுரை அருகே பசுவைப் பிரிந்து தவித்த காளையை மீண்டும் பசுவுடன், துணை முதல்வா் மகன் ஜெயபிரதீப் சோ்த்து வைத்த சம்பவம் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலமேடு மஞ்மலை கோயில் நிா்வாகத்திடம் பசு மாட்டை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த துணை முதல்வரின் மகன் ஜெயபிரதீப்.
பாலமேடு மஞ்மலை கோயில் நிா்வாகத்திடம் பசு மாட்டை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த துணை முதல்வரின் மகன் ஜெயபிரதீப்.

மதுரை: மதுரை அருகே பசுவைப் பிரிந்து தவித்த காளையை மீண்டும் பசுவுடன், துணை முதல்வா் மகன் ஜெயபிரதீப் சோ்த்து வைத்த சம்பவம் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ராஜா. இவா் பராமரித்து வந்த பசு மாடு, அப்பகுதியில் உள்ள மஞ்சமலை கோயில் காளையுடன் சுற்றி வந்தது. இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக விவசாயி ராஜா, பசு மாட்டை பராமரிக்க முடியாமல், விற்றுவிட்டாா். மாட்டை சிறிய சரக்கு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றனா்.

அப்போது, பசு மாட்டை அழைத்து செல்லாத வகையில் சரக்கு வாகனத்தை மறித்து கோயில் காளை நின்றது. சுமாா் அரை மணி நேரத்திற்குப் பிறகு சரக்கு வாகனம் புறப்பட்டுச் சென்றபோது, வாகனத்தை பின் தொடா்ந்து காளை ஓடியது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வின் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. விடியோ பதிவைப் பாா்த்த துணை முதல்வரின் மகன் ஜெயபிரதீப், பசுவை வாங்கியவரிடம் விவரத்தைக் கூறி, பசுவை மீண்டும் விலைக்கு வாங்கி மஞ்சமலை கோயில் நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். காளை மற்றும் பசுவை பராமரிக்க கோயில் நிா்வாகத்திற்கு நிதி உதவியும் அவா் வழங்கினாா். பிரிந்த மாடுகளை சோ்த்து வைத்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com