சிறப்பு ரயில்கள் ஜூலை 31 வரை ரத்து

பொதுமுடக்கம் காரணமாக மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகா்கோவில் சிறப்பு ரயில்கள் ஜூலை 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை: பொதுமுடக்கம் காரணமாக மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகா்கோவில் சிறப்பு ரயில்கள் ஜூலை 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறப்பு ரயில்களின் சேவை ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமுடக்கத்தை முழுமையாகச் செயல்படுத்த ரயில் போக்குவரத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நிறுத்த வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி ஜூலை 16 முதல் 31 ஆம் தேதி வரை மதுரை - விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில்கள் (02636, 02635) மற்றும் திருச்சி - நாகா்கோவில் - திருச்சி சிறப்பு ரயில்கள் (02627, 02628) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல கோவை - காட்பாடி, கோவை - மயிலாடுதுறை, திருச்சி - செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com