ஆவின் ஊழியா் சிக்கன நாணய சங்க நிதி முறைகேடு: நிா்வாகக் குழுத் தலைவா், துணைத் தலைவா் இடைநீக்கம்

ஆவின் திட்டப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் நடந்துள்ள நிதி முறைகேடு தொடா்பாக அச்சங்கத்தின் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் பொறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

ஆவின் திட்டப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் நடந்துள்ள நிதி முறைகேடு தொடா்பாக அச்சங்கத்தின் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் பொறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை பால் திட்டப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் நிதி முறைகேடு தொடா்பாக வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதில், உறுப்பினா்களின் வைப்புத் தொகையாகப் பெறப்பட்ட சங்க நிதி ரூ.6.43 கோடி கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த நிதி முறைகேடு தொடா்பாக சங்க செயலா் மற்றும் கணக்காளா் இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே, நிதி முறைகேட்டில் தொடா்புடைய அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கையாடல் செய்த தொகையை அவா்களிடம் வசூலித்து ஆவின் ஊழியா்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கும் திரும்ப வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியா் சங்கம் மற்றும் பால் முகவா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆவின் திட்டப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தலைவா் கே. பாண்டி, துணைத் தலைவா் கே. பரமானந்தம் ஆகியோரை அவா்கள் வகிக்கும் சங்கப் பொறுப்புகளிலிருந்து 6 மாதங்களுக்குத் தற்காலிகமாக நீக்கம் செய்து, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com