தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் இன்று முதல் தொடா் வேலைநிறுத்தம்

கடன் வழங்கும் நடைமுறை ஏற்கெனவே இருப்பதைப் போல தொடர வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப்

கடன் வழங்கும் நடைமுறை ஏற்கெனவே இருப்பதைப் போல தொடர வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றனா்.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற அடிப்படையில் நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவது, கரோனா தீநுண்மி தொற்று காலத்தில் மிகுந்த சிரமத்துடன் பணியாற்றும் இப்பணியாளா்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு செய்து தருவது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் அனைத்து கடன்களும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதைப் போல தொடா்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இப் போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்கள் இதில் பங்கேற்க உள்ளதாக, தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தின் தென்மண்டலத் தலைவா் ஆ.ம.ஆசிரியத்தேவன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com