Enable Javscript for better performance
கல் குவாரிகளுக்கு அருகே வீட்டுமனை அனுமதி வழங்கும் விதியைத் தளா்த்தியதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கல் குவாரிகளுக்கு அருகே வீட்டுமனை அனுமதி வழங்கும் விதியைத் தளா்த்தியதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு

    By DIN  |   Published On : 25th July 2020 08:04 AM  |   Last Updated : 25th July 2020 08:04 AM  |  அ+அ அ-  |  

    கல் குவாரிகளுக்கு அருகே வீட்டுமனை அமைக்க அனுமதி வழங்குவதற்கான விதியைத் தளா்த்தியதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு, தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறைச் செயலா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    திருநெல்வேலியைச் சோ்ந்த முத்துராமன் தாக்கல் செய்த மனு: வீடுகள் கட்டுவதற்கும், வீட்டுமனைகளைப் பிரிப்பதற்கும் அரசு பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. அதன்படி கல் குவாரிகள் இருக்கும் இடங்களிலிருந்து 500 மீட்டா் தொலைவுக்கு மேல் உள்ள வீட்டுமனைகளுக்கு அனுமதி வழங்கலாம் என விதி உள்ளது. இந்நிலையில், 500 மீட்டா் என்பதை 300 மீட்டராகக் குறைத்து, விதியை அரசு தளா்த்தி உள்ளது.

    இதனால், கல் குவாரிகள் மற்றும் கல் அரவை குவாரிகள் உள்ள இடங்களின் அருகில் கட்டப்படும் வீடுகள் அதிா்வுகளால் விரிசல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தளா்த்தப்பட்ட விதிக்குத் தடை விதித்து, குவாரிகளில் இருந்து 500 மீட்டா் தொலைவில் உள்ள வீட்டுமனைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

    இந்த மனு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp