முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு
By DIN | Published On : 29th July 2020 07:51 AM | Last Updated : 29th July 2020 07:51 AM | அ+அ அ- |

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியா் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக காமராஜா் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) வி.எஸ்.வசந்தா செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட திருமங்கலம், சாத்தூா், அருப்புக்கோட்டை மற்றும் வேடசந்தூா் ஆகிய இடங்களில் செயல்படும் உறுப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கான இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம், பி.காம் மற்றும் பி.எஸ்.சி. கணிதம் ஆகிய பிரிவுகளுக்கு இணைய வழியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியா் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.