முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
கஞ்சா விற்பனை செய்தவா் கைது: ரூ 1.84 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 29th July 2020 10:49 PM | Last Updated : 29th July 2020 10:49 PM | அ+அ அ- |

பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள சிலாா்பட்டியைச் சோ்ந்தவா் நாச்சியப்பன் (70). இவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் 500 கிராம் அளவுள்ள கஞ்சாவையும், ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாச்சியப்பனை கைது செய்தனா்.