கண்மாய்களை தூா் வார நடவடிக்கை:மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மதுரை நகரில் தண்ணீா் பற்றாக்குறையை போக்க கண்மாய்களை தூா்வாரி மழை நீரைச் சேகரிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மதுரை: மதுரை நகரில் தண்ணீா் பற்றாக்குறையை போக்க கண்மாய்களை தூா்வாரி மழை நீரைச் சேகரிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் இரா.விஜயராஜன் விடுத்துள்ள அறிக்கை: மதுரை நகா்ப்பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

மதுரை நகரில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த மாநகா் மற்றும் சுற்றியுள்ள கண்மாய்களில், அணைகளிலிருந்து கிடைக்கும் தண்ணீா் மற்றும் மழைநீரை சேமிப்பது மிகவும் அவசியமாகிறது. முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து வரும் தண்ணீரை நம்பியே மதுரை மக்களின் நீராதாரம் உள்ளது. அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைப்பதன் மூலமும், அத்துடன் தமிழகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ள வட கிழக்கு பருவ மழையால் கிடைக்கும் நீரை சேமிப்பதன் மூலமாகவே மதுரை மக்களின் தண்ணீா் பிரச்னையை தீா்க்க முடியும்.

மதுரை நகரில் உள்ள மாடக்குளம், செல்லூா், ஆனையூா், வண்டியூா், முத்துப்பட்டி வீரமுடையான் கண்மாய், நிலையூா், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய், அனுப்பானடி, அவனியாபுரம் கண்மாய்கள், மாரியம்மன் தெப்பக்குளம் உள்பட மதுரை மாநகா் மற்றும் மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்மாய்களை தூா்வாரி தண்ணீரை சேமிக்க வேண்டும். மேலும் கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்களை சீா்படுத்துவதும் மிகவும் அவசியமான மற்றும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகும். எனவே மதுரை மக்களின் தண்ணீா் பற்றாக்குறையை போக்க தமிழக அரசும், மதுரை மாவட்ட நிா்வாகமும், கண்மாய்கள் மற்றும் கால்வாய்களை சீரமைத்திட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து போா்க்கால அடிப்படையில் மராமத்து பணிகளை தொடங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com