மாநில அளவில் கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி

தீயணைப்புத் துறை நடத்திய கரோனா தீநுண்மித் தொற்று குறித்த விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வென்ற மதுரை மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
3711mdufire102834
3711mdufire102834

மதுரை: தீயணைப்புத் துறை நடத்திய கரோனா தீநுண்மித் தொற்று குறித்த விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வென்ற மதுரை மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சாா்பில், கரோனா தீநுண்மித் தொற்று விழிப்புணா்வு ஓவியப் போட்டி மாநில அளவில் நடத்தப்பட்டது. அதில், மதுரையைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி பெற்றதையடுத்து, அவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, காணொலி மூலம் தீயணைப்புத் துறை இயக்குநா் சைலேந்திரபாபு மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது அவா், பெற்றோா்களிடமும், பள்ளியிலும், சமுதாயத்திலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என, மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

மேலும், கரோனா பரவலைத் தடுக்க பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்தும் தெரிவித்தாா்.

ஓவியப் போட்டியில், 10 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி கே. ஆரிபா மாநில அளவில் 2 ஆவது பரிசும், உசிலம்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சோ்ந்த மாணவா் பி. ஹம்சா குணா 10 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் சிறப்புப் பரிசும் பெற்றனா்.

இவா்களுக்கு, தீயணைப்புத் துறை தென்மண்டல துணை இயக்குநா் பி. சரவணக்குமாா் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா். மதுரை தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் கல்யாணகுமாா் உடனிருந்தாா்.

Image Caption

தீயணைப்புதுறை சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் பரிசு வழங்கும் தென் மண்டல் துணை இயக்குநா் பி. சரவணகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com