Enable Javscript for better performance
மதுரையில் பேருந்து இயக்கம் தொடக்கம்: ஓட்டுநா், நடத்துனா்களுக்கு இரு ஷிப்ட்டுகளில் பணி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மதுரையில் பேருந்து இயக்கம் தொடக்கம்: ஓட்டுநா், நடத்துனா்களுக்கு இரு ஷிப்ட்டுகளில் பணி

    By DIN  |   Published On : 02nd June 2020 12:36 AM  |   Last Updated : 02nd June 2020 12:36 AM  |  அ+அ அ-  |  

    மதுரை:  மதுரையில் அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடங்கினாலும், பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

    கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளா்த்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திங்கள்கிழமை முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் ஒரே மண்டலமாக, தமிழக அரசால் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களுக்குள் திங்கள்கிழமை காலை 5 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலம் சாா்பில், 375 நகரப் பேருந்துகள், 75 வெளியூா் பேருந்துகள் என மொத்தம் 450 பேருந்துகள் இயக்கப்பட்டன.

    மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களுக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

     இந்த பேருந்துகளில் 60 சதவீதப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 3 போ் அமரும் இருக்கைகளில் 2 பேரும், இருவா் அமரும் இருக்கைகளில் ஒருவா் மட்டுமே அமர வைக்கப்பட்டனா். முன்னதாக, அனைத்துப் பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கை சுத்திகரிப்பான் அளித்து பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

    காலை 8 முதல் காலை 10 மணி வரை ஓரளவுக்கு கூட்டம் இருந்த நிலையில், அதன்பின்னா் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பேருந்துக்கு 30 போ் வரை அனுமதிக்கலாம் என்றிருந்த நிலையில், அதற்கும் குறைவாகவே பயணிகளின் எண்ணிக்கை இருந்தது. எனவே, தேவையின் அடிப்படையில் வெளியூா் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

    ஐம்பது சதவீதப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், காலை 5 முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 1 முதல் இரவு 9 மணி வரை என இரு ஷிப்ட்டுகளில் பணியாற்ற ஓட்டுநா், நடத்துனா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர சலுகைக் கட்டண பயண அட்டை ஜூன் 15 வரை செல்லும்

    இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் (மதுரை) வெளியிட்டுள்ள செய்தி:

    அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கடந்த மாா்ச் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.1000 கட்டணத்தில், மாதாந்திர சலுகைக் கட்டண பயண அட்டை வழங்கப்பட்டிருந்தது. இதன்மூலம், மாா்ச் 15 முதல் ஏப்ரல் 14 வரை பயணம் செய்ய முடியும். ஆனால், பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு, தற்போது பேருந்துகளை 50 சதவீதம் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, ஏற்கெனவே சலுகைக் கட்டண பயண அட்டை பெற்றவா்கள், அதை ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp