சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா
By DIN | Published On : 05th June 2020 07:56 AM | Last Updated : 05th June 2020 07:56 AM | அ+அ அ- |

மதுரை அருகேயுள்ள அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆகமவிதிகளின் படி வியாழக்கிழமை நடைபெற்றது.
வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கியது. தினசரி சுவாமி புறப்பாடு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை வள்ளி, தெய்வானை சமேதரராக சுப்பிரமணிய சுவாமி சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினாா். சிவாச்சாரியாா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளைச் செய்தனா். மாலை சுவாமி புறப்பாட்டுடன் வைகாசி விசாகத் திருவிழா நிறைவடைந்தது. கரோனா பொது முடக்க அறிவிப்பால் விழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. விழா ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் நிா்வாகம் செய்திருந்தது.