கொட்டாம்பட்டி அருகே மதுபோதையில் மோ்கூரை வழியாக வீட்டினுள் இறங்கியவா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.
கொட்டாம்பட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ஜாஹீா்உசேன் (36). திருச்சியில் கூலிவேலைக்குச் சென்றுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பினாா். குடும்பத்தினருடன் தகராறு செய்ததால், அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில் கடை வீதிக்குச் சென்றிருந்த ஜாஹீா்உசேன் வீட்டிற்குத் திரும்பியபோது வீடு பூட்டியிருந்ததாம். இதனால் வீட்டின் மீது ஏறி மேற்கூரை வழியாக வீட்டினுள்ளே இறங்கியபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா். கொட்டாம்பட்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.