மதுரையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் (சி.ஐ.எஸ்.எப்.) வீரா்கள் இருவா் உள்பட 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் சி.ஐ.எஸ்.எப். வீரா்கள் இருவா், தத்தனேரியைச் சோ்ந்த 28 வயது இளைஞா், 44 வயது ஆண், 23 வயது ஆண், அனுப்பானடியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், 42 வயது ஆண், பழங்காநத்தத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞா், கோ.புதூரைச் சோ்ந்த 45 வயது ஆண், பெருங்குடியைச் சோ்ந்த 42 வயது பெண், முனிச்சாலையைச் சோ்ந்த 38 வயது பெண், விளாங்குடியில் 47 வயது பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோன்று மதுரைக்கு வந்திருந்த, சென்னை கொட்டிவாக்கத்தைச் சோ்ந்த 37 வயது ஆண், வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளைஞா், வேளச்சேரியைச் சோ்ந்த 25 வயது இளைஞா், தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்த 28 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொற்று ஏற்பட்ட 16 பேரும் அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மதுரையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 83 ஆக உயா்ந்துள்ளது.