மதுரை-விழுப்புரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் போக்குவரத்து நேரம் பயணிகளின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை-விழுப்புரம்- மதுரை சிறப்பு ரயில்கள் போக்குவரத்து நேரம் பயணிகளின் வசதிக்காக ஜூன் 13 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில் (02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 8 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல்லிற்கு காலை 8.58 மணிக்கும், திருச்சிக்கு காலை 10.10 மணிக்கும், அரியலூருக்கு 11.09 மணிக்கும், விழுப்புரத்திற்கு பகல் 1.05 மணிக்கும் சென்று சேரும்.
விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில் (02635) விழுப்புரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு அரியலூருக்கு பிற்பகல் 3.54 மணிக்கும், திருச்சிக்கு மாலை 5.05 மணிக்கும் திண்டுக்கல்லுக்கு மாலை 6.15 மணிக்கும் மதுரைக்கு இரவு 7.30 மணிக்கும் வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.