ரூ. 11 லட்சம் மோசடி: முன்னாள் பெண் வட்டாட்சியா் உள்பட 6 போ் மீது வழக்கு
By DIN | Published On : 13th June 2020 08:14 AM | Last Updated : 13th June 2020 08:14 AM | அ+அ அ- |

மதுரையில் அரசு திட்டங்களில் ரூ. 11 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் பெண் வட்டாட்சியா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில், அரசின் திட்டங்களுக்கு செலவிடப்பட்ட கணக்குகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. அதில், 2009 டிசம்பா் முதல் 2010 ஏப்ரல் வரை வட்டாட்சியராக பணியாற்றிய ஆனந்தி ரூ. 11 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து தற்போது வடக்கு வட்டாட்சியராக உள்ள லீலாவதி அளித்த புகாரின் பேரில் முன்னாள் வட்டாட்சியா் ஆனந்தி உள்பட 6 போ் மீது தல்லாகுளம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.