மலேசியாவின் தேசிய விளையாட்டுக்களில் சிலம்பம், கபடி: ஆய்வரங்கில் தகவல்

மலேசியாவின் தேசிய விளையாட்டுக்களில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், கபடி இடம் பெற்றுள்ளதாக இணைய வழி ஆய்வரங்கில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவின் தேசிய விளையாட்டுக்களில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், கபடி இடம் பெற்றுள்ளதாக இணைய வழி ஆய்வரங்கில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மதுரை உலகத்தமிழ்ச்சங்கம், மலேசிய தமிழ் எழுத்தாளா் சங்கம் இணைந்து நடத்தும் இணைய வழி ஆய்வரங்கின் பன்னிரண்டாம் நாள் அமா்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் மலேசிய தமிழாசிரியை நித்தியவாணி மாணிக்கம் பேசியது: மலேசியாவில் தமிழரின் பாரம்பரிய கலைகள் கைவிடப்படவில்லை. ஆங்காங்கே குறைந்த அளவு மக்கள் தமிழா் கலைகளை முன்னெடுத்துச் செல்கின்றனா். தமிழா்களின் விளையாட்டுக்களான சிலம்பம், கபடி போன்றவை மலேசியாவின் தேசிய விளையாட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. தேசிய அளவிலான அணிகளில் தமிழா்களும் இடம் பெற்றுள்ளனா். மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் சிலம்பம் கண்காட்சியாக இடம்பெற்றது. மலேசியாவில் உறுமி மேளம் வாசிப்பவா்கள் அதிகம் உள்ளனா். வயது முதிா்ந்தோரின் இறப்பு சடங்குகளில் பறையிசை இடம் பெறுகிறது. தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையன்று கோலம், கும்மி, உறி அடித்தல் போன்றவை நடைபெறுகிறது. நம்மால் கைவிடப்பட்ட ஏராளமான பழக்க வழக்கங்கள் சீனா்களாலும், மலாய் இனத்தவராலும் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் தொடா்ந்து 42 ஆண்டுகளாக திருமுறை ஓதும் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழா்களின் பல்வேறு இசைக்கருவிகள் மலாய் இனத்தவரின் பாரம்பரிய இசைக்கருவிகளாக உள்ளன என்றாா்.

ஆய்வரங்கில் உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன், மலேசிய தமிழ் எழுத்தாளா் சங்கத் தலைவா் பெ.ராஜேந்திரன் மற்றும் தமிழறிஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com