மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.54.40 லட்சம் காணிக்கை வசூல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54.40 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி பொருள்கள் பெறப்பட்டன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பங்கேற்ற பணியாளா்கள்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பங்கேற்ற பணியாளா்கள்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54.40 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி பொருள்கள் பெறப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் மாா்ச் 24 முதல் அமல்படுத்தப்பட்டது. இதில் வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. கோயில்களில் கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை கோயில்களில் உண்டியல்களை திறக்க அறநிலையத்துறை அனுமதி வழங்கியது. இதையொட்டி 3 மாதத்துக்கு பின்னா் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன.

இதில் ரூ.54,40,710 காணிக்கையாக கிடைத்தது. மேலும் பல மாற்று பொன் இனங்கள் 279 கிராம், வெள்ளி 720 கிராம் மற்றும் அயல்நாட்டு பண நோட்டுகள் 195 பெறப்பட்டது.

உண்டியல் எண்ணும் பணியில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் செல்லத்துரை, கூடலழகா் கோயில் உதவி ஆணையா் மு.ராமசாமி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உதவி ஆணையா் ஜெ.முல்லை மற்றும் தக்காா் பிரதிநிதி, கோயில் கண்காணிப்பாளா்கள், வங்கிப் பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com