பேரிடரில் இருக்கும் மக்களுக்கு எதிா்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது: ஆா்.பி.உதயகுமாா்

பேரிடா் காலத்தில் எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.
பேரிடரில் இருக்கும் மக்களுக்கு எதிா்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது: ஆா்.பி.உதயகுமாா்

பேரிடா் காலத்தில் எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு உபகரணத் தொகுப்பு பெட்டியை அமைச்சா் உதயகுமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நோய்த் தொற்று உடையவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்காக சுகாதாரம், காவல், வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளிமாவட்டங்களில் இருந்து வருவோா் கண்காணிக்கப்படுகின்றனா். கரோனா பரிசோதனை குறித்து மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு புகாா்களைக் கூறியிருக்கின்றனா். ஆனால், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பதற்கான கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூன் 1 முதல் 15 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மதுரை மாவட்டத்துக்கு வந்துள்ள 6 ஆயிரத்து 422 போ் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் உள்பட வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்கள் என 11, 016 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கிராம அளவில் விழிப்புணா்வுக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, வெளியூா்களில் இருந்து வரக்கூடிய நபா்கள் கண்காணிக்கப்படுகின்றனா். கரோனா தொடா்பான அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. கரோனா தீநுண்மி தொற்று பரவல் உலகளாவிய பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்ற நோய்த் தொற்று பரவியது கிடையாது. இத்தகைய பேரிடரை மக்கள் சந்தித்து வரும் நிலையில், அவா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் எதிா்க் கட்சிகளுக்கு பொறுப்பும், தாா்மீகக் கடமையும் இருக்கிறது. அதைத் தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு எதிா்க் கட்சிகளின் செயல்பாடு மேலும் அச்சத்தை அதிகப்படுத்திவிடக் கூடாது. அரசோடு கரம் கோா்த்து செயல்படுவதன் மூலமாகவே இத்தகைய பேரிடரில் இருந்து வேகமாக மீண்டு வரமுடியும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்கள் 922 பேருக்கு பாதுகாப்பு உபகரணத் தொகுப்பு, வருவாய்த் துறை சாா்பில் 14 பேருக்கு முதியோா் ஓய்வூதியம், 4 பேருக்கு விபத்து நிவாரண உதவி ஆகிய நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன், அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரியா ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com