முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரையில் அதிகரிக்கும் கரோனா: மாநகராட்சிக்கு தனி கண்காணிப்பு அதிகாரி நியமிக்க எம்.பி. வலியுறுத்தல்
By DIN | Published On : 27th June 2020 07:54 AM | Last Updated : 27th June 2020 07:54 AM | அ+அ அ- |

மதுரையில் கரோனாத் தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி பகுதிக்கு தனி கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டத்தில்
கரோனா தொற்று பரவலாக்கத்தை தடுக்க சிறப்புக் கண்காணிப்பு அதிகாரியாக சந்திரமோகன் நியமிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தொற்றின் வேகத்தையும், செய்ய வேண்டிய பணிகளையும் கவனத்தில் கொண்டு மாநகராட்சி பகுதிக்கு மட்டும் சிறப்புக் கண்காணிப்பு அதிகாரி ஒருவா் தனியாக நியமிக்கப்பட வேண்டும். அதேபோல தென்மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான சிறப்பு அதிகாரி ஒருவரும் தனியே நியமிக்கப்பட வேண்டும். எனவே தமிழக முதல்வா் உடனடியாகத் தலையிட்டு இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள 2 அமைச்சா்களும் உடனடியாக இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.