அலங்காநல்லூா் அருகே தம்பதிக்கு கரோனா: கிராமத்துக்குள் நுழையும் சாலைகள் அடைப்பு

அலங்காநல்லூா் அருகே பி.மேட்டுப்பட்டி கிராமத்தில் தம்பதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கிராமத்துக்குள் நுழையும் சாலைகள் ஞாயிற்றுக்கிழமை முள்களால் அடைக்கப்பட்டன.
அலங்காநல்லூா் அருகே பி.மேட்டுப்பட்டி பகுதிக்குள் நுழையும் சாலை முள்கள் போட்டு அடைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது முதல் நோய்த் தொற்று பரவல் இல்லாத பகுதியாக அலங்காநல்லூா், பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இருந்து வந்தன. ஆனால், ஜூன் முதல் வாரம் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு, பாலமேடு மற்றும் அலங்காநல்லூா் பேரூராட்சிகளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், அலங்காநல்லூா் அருகே பி.மேட்டுப்பட்டியில் கணவன், மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பி.மேட்டுபட்டியில் பகுதிக்குள் நுழையும் அனைத்துச் சாலைகளையும் முள்களை கொண்டு பொது மக்கள் அடைத்தனா். பொதுமுடக்க விதிகள் முறையாகப் பின்பற்றப்படாமல் கடைகள் திறந்திருப்பதும், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதுமே கரோனா பரவல் அதிகரிப்பதற்குக் காரணம். எனவே, கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்க விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com