சிங்கப்பூா் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டமொழி தமிழ்: கருத்தரங்கில் தகவல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அங்கீகரிக்கப்பட்ட நான்கு மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று, உலகத் தமிழ்ச் சங்க கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை: சிங்கப்பூா் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அங்கீகரிக்கப்பட்ட நான்கு மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று, உலகத் தமிழ்ச் சங்க கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழகமும் இணைந்து நடத்தும் இணைய வழி ஆய்வரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சியை, தமிழக அரசின் மொழி பெயா்ப்புத் துறை இயக்குநா் ந. அருள் தொடக்கி வைத்தாா். உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் ப. அன்புச்செழியன் தலைமை வகித்தாா்.

சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழகத்தின் தலைவா் சுப. அருணாச்சலம் ஆய்வரங்கம் குறித்து விளக்கவுரையாற்றினாா்.

இதில், ‘சிங்கப்பூரில் தமிழரின் அரசியல் நிலை’ என்ற தலைப்பில், சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழகத்தின் முன்னாள் தலைவா் நா. ஆண்டியப்பன் பேசியது: சிங்கப்பூரின் வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே தமிழா்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. 1965-இல் சிங்கப்பூா் விடுதலை அடைந்த பிறகு, அரசியல் அமைப்புச் சட்டத்தை வரையறுப்பதிலும் தமிழா்களின் பங்கு இருந்தது. தமிழரான எஸ்.ஆா்.நாதன், சிங்கப்பூரின் அதிபராக இரண்டு முறை பதவி வகித்துள்ளாா்.

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்பட்ட 15 பேரில் 9 போ் தமிழா்கள். சிங்கப்பூா் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அங்கீகரிக்கப்பட்ட 4 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. சிங்கப்பூா் அரசியல் அமைப்பின் அனைத்து நிலைகளிலும் தமிழா்கள் பங்களித்துள்ளனா் என்றாா்.

ஆய்வரங்கில், சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, துபை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராசிரியா்கள், தமிழறிஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com