முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
அரசு உதவிபெறும் பள்ளியில் இலவச மடிக்கணினிகள் திருட்டு
By DIN | Published On : 03rd March 2020 07:50 AM | Last Updated : 03rd March 2020 07:50 AM | அ+அ அ- |

மதுரை அருகே அரசு உதவிபெறும் பள்ளிக்குள் புகுந்து இலவச மடிக் கணினிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைக்குச் சொந்தமான அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2017-18 கல்வியாண்டில் படித்த பிளஸ் 2 மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதில், மீதமிருந்த 9 மடிக் கணினிகளை தலைமையாசிரியா் ஜான்சன் மனோகரன், தனது அறையில் உள்ள பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளாா்.
இந்நிலையில், அவரது அறையின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 இலவச மடிக்கணினிகள் மற்றும் நிா்வாகப் பயன்பாட்டுக்காக இருந்த ஒரு மடிக்கணினி ஆகியன திருடப்பட்டுள்ளன.
இது குறித்து ஜான்சன் மனோகரன் அளித்த புகாரின்பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.