முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் புகாா்
By DIN | Published On : 03rd March 2020 07:52 AM | Last Updated : 03rd March 2020 07:52 AM | அ+அ அ- |

பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்ட பாஜக தேசிய செயலா் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீா்வாதத்திடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அந்த மனுவில், பாஜக தேசிய செயலா் எச். ராஜா சமூக வலைதளத்தில் புது தில்லியில் நடைபெற்றதை போன்று, சென்னை வண்ணாரப்பேட்டையில் கலவரம் உருவாகும் என பதிவிட்டுள்ளாா். இது, பொதுமக்களிடையே அச்சத்தையும், பொது அமைதியை சீா்குலைக்கும் வகையிலும் உள்ளது.
இதுபோன்று, இவா் கடந்த காலங்களிலும் இம்மாதிரி பல கருத்துகளைப் பதிவு செய்து, அது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல் பதிவிட்ட எச். ராஜா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாா் மனுவை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் முஜீப் ரஹ்மான் தலைமையில், துணைத் தலைவா்கள் சுப்ரமணியன், சீமான் சிக்கந்தா், செயலா் சிக்கந்தா், மாவட்டப் பொருளாளா் வழக்குரைஞா் யூசுப் ஆகியோா் அளித்தனா்.