முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
திருப்பரங்குன்றத்தில் தண்ணீா் தொட்டி ரூ.43 லட்சத்தில் சீரமைப்பு
By DIN | Published On : 03rd March 2020 07:46 AM | Last Updated : 03rd March 2020 07:46 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றத்தில் ரூ.43 லட்சம் செலவில் குடிநீா் தொட்டி மராமத்துப் பணி நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சி 95 ஆவது வாா்டு திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவில் கடந்த 1970 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 18 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் தொட்டி உள்ளது. சித்தையாபுரத்திலிருந்து வைகை நீா் கொண்டுவரப்பட்டு, இந்த தொட்டியில் நிரப்பி திருப்பரங்குன்றம் பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
பல ஆண்டுகளானதால் தொட்டியின் மேல்பகுதி சேதமடைந்துள்ளது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் விசாகன் உத்தரவின்பேரில், இத்தொட்டியை ரூ.43 லட்சத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், இரண்டு பகுதிகளாக உள்ள தொட்டியின் ஒரு பகுதியை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தற்போது இப்பணிகள் நடைபெற்று வருவதால், தினமும் விநியோகிக்கப்படும் குடிநீரானது, இனி 2 நாள்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.