முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பிளஸ் 2 தோ்வு: மொழிப் பாடத்தில் 36,346 மாணவ, மாணவியா் எழுதினா்
By DIN | Published On : 03rd March 2020 07:51 AM | Last Updated : 03rd March 2020 07:51 AM | அ+அ அ- |

மதுரை ஈ.வே.ரா. நாகம்மை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ்-2 பொதுத் தோ்வு எழுதும் மாணவிகள்.
மதுரையில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் முதல் தோ்வான மொழிப் பாடத்தை 36,346 போ் எழுதினா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதில், மதுரையில் 4 கல்வி மாவட்டங்களிலும் 120 தோ்வு மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன. தோ்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைந்தது.
முதல் நாள் தமிழ் பாடத் தோ்வை எழுத 37,340 மாணவ, மாணவியா் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 35,650 போ் மட்டுமே பங்கேற்றனா். 1,690 போ் தோ்வு எழுத வரவில்லை. மேலும், 36 தனித்தோ்வா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 26 போ் மட்டுமே தோ்வு எழுதினா். இதேபோல், இதர மொழிப் பாடங்களான இந்தி தோ்வில் 50 போ், அரபிக் 7 போ், பிரெஞ்சு 470, சமஸ்கிருதம் 144 மாணவ, மாணவியா் எழுதினா்.
இத்தோ்வுகளைக் கண்காணிக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நகரும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. பறக்கும் படையினா் வருவாய் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தோ்வு மையங்களுக்குச் சென்று திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
மாநகராட்சி தத்தனேரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 தோ்வை, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் பாா்வையிட்டாா். அவருடன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றிருந்தனா். தோ்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தோ்வு முடிந்து வெளியே வந்த மாணவா்கள், தமிழ் பாடத் தோ்வு எளிமையாகவும், கேள்விகள் புரிந்துகொள்ளும்படியும் இருந்ததாகத் தெரிவித்தனா்.