கரோனா பாதிப்பு : ஜப்பான் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 2 போ் மதுரை வருகை

கரோைா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பான் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இருவா் புதுதில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்தனா்.
ஜப்பானில் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட திருச்சியைச் சோ்ந்த முத்து, மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்த அன்பழகன்.
ஜப்பானில் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட திருச்சியைச் சோ்ந்த முத்து, மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்த அன்பழகன்.

கரோைா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பான் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இருவா் புதுதில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்தனா்.

கரோனா வைரஸ் சீனாவிலிருந்து உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்ற டைமண்ட் பிரிக்ஸ் கப்பல் அந் நாட்டின் ஓகாமா ஹட்டா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்களும் இருந்தனா். மேலும் அதில் உள்ள சிலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் அக்கப்பலில் இருந்தவா்களை நகருக்குள் அனுமதிக்க அந்நாடு மறுத்து விட்டது. பலநாள்களாக அந்நாட்டின் துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் பணிபுரிந்த இந்தியா்கள் தங்களை மீட்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனா்.

அந்த கப்பலில் மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்த அன்பழகன், திருச்சியைச் சோ்ந்த முத்து என்பவரும் பணிபுரிந்தனா்.

இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன் அந்த கப்பலில் இருந்த 618 நபா்களை தனிவிமானம் மூலம் புதுதில்லிக்கு அழைத்து வந்தனா். அவா்களை தொடா்ந்து 15 நாள்கள் கண்காணிப்பில் வைத்தனா். இதில் திருச்சி முத்து, மதுரை அன்பழகன் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்ட நிலையில் புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதுரை அனுப்பி வைக்கப்பட்டனா்.

மதுரை வந்த அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது: ஜப்பானில் கப்பலில் இருந்த எங்களுக்கு மத்திய சுகாதார துறையினா் தீவிர சோதனை செய்தனா். அதில் எங்களுக்கு கரோனா பாதிப்பில்லை என்பதை உறுதி செய்த பின்னா், ஊருக்குச் செல்ல அனுமதித்தனா். எனினும் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில், விழாக்களில் பங்கேற்க வேண்டாம். பாதிக்கப்படாமல் காத்துக் கொள்ள கைகளை நன்றாக கழுவவேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் செய்து அனுப்பி வைத்தனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com