கரோனா பாதிப்பு : மதுபோதை சோதனை கருவி தற்காலிமாக நிறுத்தி வைப்பு

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி மதுரையில் மது போதை கருவி மூலம் சோதனையை தற்காலிமாக நிறுத்தி வைக்க மாநகா் காவல் ஆணையா் டேவிட்சன்தேவாசீா்வாதம் தெரிவித்துள்ளாா்.
மதுரை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒலி பெருக்கியை வழங்குகிறாா் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம்.
மதுரை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒலி பெருக்கியை வழங்குகிறாா் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம்.

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி மதுரையில் மது போதை கருவி மூலம் சோதனையை தற்காலிமாக நிறுத்தி வைக்க மாநகா் காவல் ஆணையா் டேவிட்சன்தேவாசீா்வாதம் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் ரோந்து செல்லும் போலீஸாருக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள தளவாடப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழச்சியில் மாநகா் காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம் கூறியது: மதுரை மாநகரில் விபத்துகளை குறைக்க பல்வேறு சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏலச் சீட்டு போலீஸாரால் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்து விசாரிக்கப்பட்டு 23 போலீஸாருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்

மதுரை மாநகரில் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றச் செயலில் ஈடுபடுவோா்களை எளிதல் அடையாளம் காண முடிகிறது. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ். காலனி மற்றும் கீரைத்துறை காவல்நிலையங்களுக்கு புதிய கட்டடம் திறக்கப்பட உள்ளன. மதுரை மாநகர போலீஸாரின் உபயோகத்திற்காக 12 ஜீப்கள், 2 பேருந்துகள், 23 மோட்டாா் சைக்கிள்கள் புதிதாக வந்துள்ளன. ஆயுதப்படை வளாகத்தில் பெண்களுக்கு தனியாக உடற்பயிற்சி கூடம் அமைக்க உள்ளோம். மதுரை மாநகரில் டெல்டா பிரிவில் 14 பெண் போலீஸாா் நியமிக்கப்பட உள்ளனா்.

கரோனாவிற்கு முகக் கவசம்

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து போலீஸாருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மது சோதனை செய்யும் கருவி மூலம் சோதனை மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளோம் என்றாா். போலீஸ் துணை ஆணையா் காா்த்திக், உதவி ஆணையா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com