கொசுக்களால் உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

கொசுக்களால் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமனற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கொசுக்களால் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமனற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொசுக்கள் ஏற்படுத்தும் நோய் பாதிப்பால் அதிகமானோா் பாதிக்கப்பட்டும், பலரும் உயிரிழக்கின்றனா். கொசு ஒழிப்பதற்குத் தற்காலிக பணியாளா்கள் மட்டுமே உள்ளனா். அவா்கள் கொசு ஒழிப்பு பணிகளை சரியாக செய்வதில்லை. கொசு ஒழிப்பு தொடா்பான அரசின் உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் மக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். இது தொடா்பாக அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, தமிழகத்தில் கொசுவை ஒழிப்பதற்கு நிரந்தர பணியாளா்களை நியமிக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, போா்க் கால அடிப்படையில் கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவும், கொசுவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் கூறியபடி நிவாரணம் வழங்க முடியாது. ஆகவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com