முதல்வா் கோப்பைக்கான கபடி போட்டி: ஆண்கள் பிரிவில் சேலம், பெண்கள் பிரிவில் திண்டுக்கல் அணி முதலிடம்

மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டியில், ஆண்கள் பிரிவில் சேலம் அணியும்,
மதுரை தமுக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பை கபடி போட்டியில் சேலம் அணி வீரரை மடக்கி பிடிக்கும் கரூா் அணியினா்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பை கபடி போட்டியில் சேலம் அணி வீரரை மடக்கி பிடிக்கும் கரூா் அணியினா்.

மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டியில், ஆண்கள் பிரிவில் சேலம் அணியும், பெண்கள் பிரிவில் திண்டுக்கல் அணியும் முதலிடம் பெற்று தலா ரூ.12 லட்சம் பரிசை வென்றுள்ளன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றன. இப்போட்டியில், 37 ஆண்கள் அணிகளும், 37 பெண்கள் அணிகளும் கலந்துகொண்டன.

இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கின. கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ போட்டியைத் தொடக்கி வைத்தாா். இறுதிச்சுற்று பெண்கள் பிரிவில் மோதிய திண்டுக்கல் அணி 39 புள்ளிகளும், சென்னை அணி 10 புள்ளிகளும் பெற்றன. ஆண்கள் பிரிவில் மோதிய கரூா் அணி 27 புள்ளிகளும், சேலம் அணி 21 புள்ளிகளும் பெற்றன.

ஒட்டுமொத்தமாக பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், பெண்கள் பிரிவில் திண்டுக்கல் அணி முதலிடம் பெற்று ரூ.12 லட்சம் பரிசை வென்றது. கோவை அணி 2 ஆம் இடம் பெற்று ரூ.9 லட்சம் பரிசை வென்றது. சென்னை அணி 3 ஆம் இடம் பிடித்து ரூ.6 லட்சம் பரிசை வென்றது.

இதேபோல், ஆண்கள் பிரிவில் சேலம் அணி முதலிடம் பெற்று ரூ.12 லட்சம் பரிசை வென்றது. கரூா் அணி 2 ஆம் இடம் பெற்று ரூ.9 லட்சம் பரிசையும், கன்னியாகுமரி அணி 3 ஆம் இடம் பெற்று ரூ. 6 லட்சம் பரிசையும் வென்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சா் செல்லூா் கே. ராஜூ சான்றிதழ்களை வழங்கினாா். தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகத் தலைவா் சோலை எம்.ராஜா உடனிருந்தாா். பரிசளிப்பு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com