மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அடுத்தடுத்து இருவா் தீக்குளிக்க முயற்சி

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இருவா், அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற லாரி ஓட்டுநா் மணிகண்டன்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற லாரி ஓட்டுநா் மணிகண்டன்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இருவா், அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள கரிசகாலாம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). வாடகை வாகன ஓட்டுநராக வேலை செய்து வரும் இவா், தனது வீட்டுமனைக்கு பட்டா வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளாா். பட்டா சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் வேண்டும் என கிராம உதவியாளா் கேட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மணிகண்டன் புகாா் அளித்தபோதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். பட்டா வழங்காமல் இழுத்தடித்துள்ளனா்.

அதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்த அவா், தண்ணீா் பாட்டிலில் கொண்டு வந்திருந்த டீசலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் செய்தியாளா்கள் ஓடிச் சென்று அவரைத் தடுத்து மீட்டனா்.

இதேபோல், மதுரை உத்தங்குடியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (40) என்பவா், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது மீட்கப்பட்டாா்.

இவா், ஆக்கிரமிப்பில் இருக்கும் ஊருணி, கண்மாய்களை மீட்கக் கோரி

நீண்டகாலமாக கோரிக்கை மனு அளித்து வந்தபோதும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தீக்குளிக்க முயன்றதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

இந்த இருவரையும் தல்லாகுளம் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணைக்குப் பின்னா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில் சோதனையிடும் போலீஸாா், மனு அளிக்க வந்தவரிடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com