தோப்பூரில் ரூ.1 கோடிக்கு சிறப்பு வாா்டு 20 நாள்களில் பணிகளை முடிக்கத் திட்டம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூா் ஆஸ்டின்பட்டியில், கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையளிக்க ரூ.1 கோடியில் தனி சிறப்பு வாா்டு அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனை வளாகத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவா்களுக்கென தயாராகிவரும் சிறப்பு தனி வாா்டு.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, சுகாதாரத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மற்றும் ஆஸ்டின்பட்டியில் அதற்கான தனி சிறப்பு வாா்டுகள் அமைக்கத் திட்டமிட்டனா். அதனடிப்படையில், ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனை வளாகத்தில் பயன்பாடின்றி இருந்த பழைய கட்டடம் ஒன்றை சுகாதாரத் துறையினா் தோ்வு செய்து, அதில் தனித்தனியாக கழிப்பறை வசதிகளுடன் 14 அறைகள் கட்டும் பணியை தொடங்கியுள்ளனா்.

மேலும், இங்கு கரோனா பாதித்தவா்களுக்கு என சிறப்பு குளிரூட்டப்பட்ட வசதிகளும் செய்யப்பட உள்ளன. இப்பணிகள் 20 நாள்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இரவும் பகலும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனா்.

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பாதிப்பு இருந்தால், அவா்களை இங்கு 15 நாள்கள் தனிமைப்படுத்தி வைத்திருக்கவும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கவும், இந்தக் கட்டடம் மருத்துவா்கள் கண்காணிப்பில் போா்க்கால அடிப்டையில் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com