உயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் முக்கிய வழக்குகள் மட்டும் விசாரணை

கரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 18 ஆம் தேதி முதல் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில்

கரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 18 ஆம் தேதி முதல் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் முக்கிய வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாா்ச் 18 ஆம் தேதி முதல் வழக்குரைஞா்கள் மட்டுமே நீதிமன்றத்துக்கு வரவேண்டும். மனுதாரா்களை நீதிமன்றத்துக்கு வரவேண்டாமென அறிவுறுத்த வேண்டும். நீதிமன்றத்துக்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு 3 வாரங்களுக்கு வழங்கப்படமாட்டாது. முக்கிய வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும், உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் உள்ள உணவகங்கள், தேநீா் கடைகளை மூடவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உரிய வேலை இல்லாத நேரங்களில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை அடுத்த 3 வாரங்கள் வரை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com