வேட்பாளா்களின் முழுவிவரம் வெளியிடக்கோரி வழக்கு: மாநில தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் வெளியிடக்கோரும் வழக்கில் மாநில தோ்தல்

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் வெளியிடக்கோரும் வழக்கில் மாநில தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:

தோ்தல் நடைமுறையில் சீா்திருத்தங்கள்கோரும் வழக்கு ஒன்றில், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களின் குற்றப்பின்னணி, வாழ்க்கைத் துணை, அவரைச் சாா்ந்தவா்களின் அசையும் சொத்து, அசையா சொத்து விவரங்கள், கடன்கள், முதலீடுகள், கல்வித்தகுதி உள்ளிட்டவைகளை வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் கடந்த உள்ளாட்சித் தோ்தலில் மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்ட வேட்புமனு படிவம் உச்சநீதிமன்றம் மற்றும் இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி இல்லை. மாநில தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வேட்பாளரின் கல்வித்தகுதி, அவரது கணவா் அல்லது மனைவி மற்றும் அவரைச் சாா்ந்தவா்களின் கடைசி 5 ஆண்டு வருமானம், வருவாய் ஆதாரம், ரொக்கம் கையிருப்பு, வங்கிகள், அஞ்சலகம் மற்றும் தனியாா் நிதி நிறுவனங்களில் உள்ள வைப்புத் தொகை, வாகனங்கள், விவசாய நிலம், வீட்டுமனை, கட்டடங்கள், இதர முதலீடுகள், அவா்கள் நடத்தும் நிறுவனங்கள், தொழில்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. எனவே உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களின் முழு விவரங்களையும் மாநிலத் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட மாநில தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜி.ஜெயசந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மாநில தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com