செவிலியா் கொலைவழக்கு: தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 2 போ் உயா்நீதிமன்றத்தில் ஆஜா்

அரசு செவிலியா் கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட 2 போ் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

அரசு செவிலியா் கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட 2 போ் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த செல்லச்சாமி மனைவி தமிழ்ச்செல்வி (40). 2008 ஆம் ஆண்டு மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். கல்லிடைக்குறிச்சி வீட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்டாா். கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், மாத்திரை வாங்குவதுபோல வந்த ஒரு கும்பல் தமிழ்ச்செல்வியைக் கொன்று, அவரது 64 கிராம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இவ்வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (27), அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த வசந்தகுமாா் (30) உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி மாவட்ட மகளிா் நீதிமன்றம், ராஜேஷ், வசந்தகுமாா் ஆகிய இருவருக்கும் தூக்குத்தண்டனை விதித்தது. மற்றவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், ராஜேஷ், வசந்தகுமாரின் தூக்குத்தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி கல்லிடைக்குறிச்சி போலீஸாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ், வசந்தகுமாா் ஆகியோரை ஆஜா்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஜி.ஜெயசந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ், வசந்தகுமாா் ஆகியோா் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களிடம், உங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்துசெய்யக்கோரி மேல்முறையீடு செய்ய அனுமதி உள்ளது. அதற்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்குரைஞா் தேவைப்பட்டால் நியமனம் செய்கிறோம் என நீதிபதிகள் கூறினா். அதற்கு இருவரும் தாங்களே வழக்குரைஞரை நியமனம் செய்துகொள்வதாகத் தெரிவித்தனா். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை மாா்ச் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com