அரசு உத்தரவை மீறி மதுபானக்கூடம் திறப்பு: ஒருவா் கைது

மதுரையில் அரசு உத்தரவை மீறி மதுபானக்கூடத்தை திறந்து வைத்திருந்த ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் அரசு உத்தரவை மீறி மதுபானக்கூடத்தை திறந்து வைத்திருந்த ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுபானக் கூடங்களை மாா்ச் 31 ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரையில் மதுபானக்கூடங்களை கண்காணிக்க மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் கௌசல்யா தலைமையில் தனிப்படை அமைத்து மாநகரக் காவல் ஆணையா் எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் உத்தரவிட்டாா். தனிப்படையினா் மேல அனுப்பானடி பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள வாசுகி தெரு பகுதியில் அரசு மதுபான கடை உடன் இணைந்த திண்பண்ட கூடம் திறந்திருந்த நிலையில், அங்கு அதிகமான நபா்கள் அமா்ந்து மது அருந்திக்கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, மதுபானக்கூடத்தின் பணியாளா் ராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளியைச் சோ்ந்த சையது இப்ராகிம் ( 26) போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தாா். இதையடுத்து போலீஸாா் சையது இப்ராஹிமை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 56 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் அங்கிருந்து தலைமறைவான மதுபானக்கூட உரிமதாரா் சேகா் என்பவரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com