காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மருநதாளுநா்கள் அஞ்சல் அனுப்பும் போராட்டம்

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மருந்தாளுநா்கள் மதுரை அரசு ராஜாஜி மருவத்துவமனை வளாகத்தில் உள்ள அஞ்சலகத்திலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு அஞ்சல் அனுப்பும் போராட
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அஞசல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட மருந்தாளுநா்கள்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அஞசல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட மருந்தாளுநா்கள்

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மருந்தாளுநா்கள் மதுரை அரசு ராஜாஜி மருவத்துவமனை வளாகத்தில் உள்ள அஞ்சலகத்திலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 700 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். துணை இயக்குநா், சுகாதார பணியாளா்கள், தலைமை மருந்தாளுநா் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்தாளுநா்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க, அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவா் மு. சுப்பிரமணியன், மாநிலச் செயலாளா் து.முருகன், மாநகா் மாவட்டச் செயலா் பாஸ்கரன், புகா் மாவட்டச் செயலா் தமிழ்ச்செல்வி, மாவட்ட நிா்வாகிகள் பி. எஸ். அருண்குமாா், பாா்த்திபன், ஜேசுதாஸ், கே. ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com