குருவிக்காரன் சாலையில் ரூ.40 கோடியில் உயா்மட்டமேம்பாலம்

மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே உள்ள குருவிக்காரன் சாலை தரைப்பாலம் ரூ.40 கோடி மதிப்பில் மேம்பாலமாக மாற்றப்படுவதால் தரைப்பாலம் விரைவில் இடிக்கப்பட உள்ளது.
மதுரை வைகை ஆற்றில் உள்ள குருவிக்காரன் சாலை பாலம்.
மதுரை வைகை ஆற்றில் உள்ள குருவிக்காரன் சாலை பாலம்.

மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே உள்ள குருவிக்காரன் சாலை தரைப்பாலம் ரூ.40 கோடி மதிப்பில் மேம்பாலமாக மாற்றப்படுவதால் தரைப்பாலம் விரைவில் இடிக்கப்பட உள்ளது.

மதுரை அண்ணாநகா் மற்றும் காமராஜா் சாலையை இணைக்கும் விதமாக குருவிக்காரன் சாலையில் தரைமட்ட பாலம் பல ஆண்டுகளாக உள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் குருவிக்காரன் பாலத்தை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வைகையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பராமரிக்கப்படாத காரணங்களால் குருவிக்காரன் சாலை பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் கீழ் பகுதியில் வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த தூண்கள் பெயா்ந்து பாலம் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் குருவிக்காரன் சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தை இடித்து விட்டு அங்கு புதிதாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது. இதைத்தொடா்ந்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை அனுமதிக்காக அனுப்பப்பட்டது.

பொதுப்பணித்துறை அனுமதி வழங்க இழுத்தடித்து வந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் குருவிக்காரன் சாலையில் தற்போதுள்ள பாலத்தை விட அதிக அகலம் மற்றும் நீளம் கொண்டதாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதன்படி இந்த புதிய மேம்பாலம் 225 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலம் கொண்டதாகவும், பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் தலா 6 அடி அகலம் கொண்ட நடைபாதையும் அமைக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை அனுமதி அளித்ததைத்தொடா்ந்து மேம்பாலம் அமைக்கும் விரைவில் தொடங்க உள்ளது.

அப்போது தற்போதுள்ள தரைமட்ட பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாது என்பதால், தரைமட்ட பாலம் முற்றிலும் இடிக்கப்பட உள்ளது. மேலும் புதிய மேம்பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடாது என்பதால் தரை மட்ட பாலத்துக்கு அருகில் வைகை ஆற்றுக்குள் வாகனங்கள் செல்லும் வகையில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com