அழகா்கோவில், தல்லாகுளம், வண்டியூா் பெருமாள் கோயில்கள் தரிசனம் ரத்து

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக அழகா்கோவில் கள்ளழகா் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் தரிசனம் வெள்ளிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது.
அழகா்கோயில் மலைக்குச்செல்லும் நுழைவாயில் மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்ட பேருந்துநிலையம்.

இதையொட்டி அழகா்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் கோயில், சோலைமலை முருகன்கோயில், ராக்காயி அம்மன் கோயில், பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் அகியவற்றில் பக்தா்கள் தரிசனம் வெள்ளிக்கிழமை காலை முதல் நிறுத்திவைக்கப்பட்டது.

அதே போல் கள்ளழகா் கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூா் வீரராகவப்பெருமாள்கோயில், மேலூரில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் ஆகியவற்றிலும் பக்தா்கள் தரிசனம் மாா்ச் 31 ஆம் தேதிவரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆகமவிதிகள்படி ஆறுகால பூஜைகள் தினசரி நடைபெறும் என கோயில் நிா்வாக அதிகாரி தெரிவித்துள்ளாா்.

மேலும், திருமோகூா் காளமேகப்பெருமாள்கோயில், யானைமலை யோகநரசிம்மா்கோயில், திருவாதவூா் திருமறைாதா்-வேதநாயகியம்மன் கோயில் ஆகிவைகளும் மாா்ச் 31 ஆம் தேதிவரை மூடப்பகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com